Wednesday, 27 June 2018

2018 புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு தமிழ் பாடக் குறிப்புகள்



2018 புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு தமிழ் பாடக் குறிப்புகள்




இயல் 1  அமுதென்று பேர்


இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300 க்கும் மேற்ப்பட்டது .

இவற்றை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். அவை ,

1. இந்தோ – ஆசிய மொழிகள்
2. திராவிட மொழிகள்
3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
4. சீன – திபெத்திய மொழிகள்

இந்தியநாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று ச.அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.


திராவிடம் என்ற  சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலப்பட்டர்.


தமிழ் என்ற சொல்லிலிருந்துதான் திராவிடா என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஹீராஸ் பாதிரியார் என்பார்

இம்மாற்றத்தைத் தமிழ் → தமிழா → தமிலா → டிரமிலா → ட்ரமிலா → த்ராவிடா → திராவிடா என்று விளக்குகின்றார்.

அறிஞர் வில்லிய ம் ஜோன்ஸ் என்பார் வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டார்.


முதன்முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,

மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய
மொழிகள் எனவும் பெயரிட்டர்.

ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை

என்றும் கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

திராவிட மொழிக்குடும்பம்,மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள் , நடுத்திராவிட மொழிகள் , வட திராவிட  மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது .


திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்.


தமிழ் வட மொழியின் மகளன்று ; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி;

கால்டுவெல்

"
காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்


காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! "   ஈரோடு தமிழன்பன்


இவரது ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலுககு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.


உ்லகத் தாய்மொழி தினம் பிப்ரவரி 21


தமிழை ஆட்சி மொழியகாக்க கொண்ட நாடுகள் இ்லங்கை, சிங்கப்பூர்.

கண்ணி -  இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர். அதே போல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.


சொல்லும் பொருளும் 


மூன்றினம்   -  துறை , தாழிசை , விருத்தம்

முக்குணம்   -  சத்துவம் , இராசசம் , தாமசம்.
ஊனரசம்      -  குறையுடைய சுவை 

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான தூது , வாயில் இலக்கியம் , சந்து இலக்கியம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.


தமிழ் விடு தூது 268 கண்ணிகளைக் கொண்டது. இந்நூலின் ஆசிரியர் யார் என அறிய இயலவில்லை. இதை 1930 ல் உ.வே.சா முதன்முதலில் பதிப்பித்தார்.


பெயர்                                                எண் அளவு


முந்திரி                                                   1/320

அரைக்காணி                                     1/160
அரைக்காணி முந்திரி                   3/320
காணி                                                     1/80
கால் வீசம்                                           1/64
அரைமா                                                1/40
அரை வீசம்                                          1/32
முக்காணி                                            3/80
முக்கால் வீசம்                                  3/64
ஒருமா                                                   1/20
மாகாணி (வீசம்)                               1/16
இருமா                                                   1/10
அரைக்கால்                                        1/8
மூன்றுமா                                             3/20
மூன்று வீசம்                                       3/16
நாலுமா                                                1/5


பாவின் சுவைகளில் ஒன்றாக இளிவரல் என்ற துன்பச் சுவையினைத்
தமிழிலக்கணங்கள் சுட்டுகின்றன.
கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் இளிகியா (ελεγεία) என அழைக்கப்படுகின்றன.

ஒரு தொடரில் எழுவாயும், செயப்படுபொருளும் பெயர்ச்சொல்லாக இருக்கும். பயனிலை, அந்த தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும்.




இயல் 2 உயிருக்கு வேர்


பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்பர்.


இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு உறை கிணறு என்றும் மக்கள் பருகுநீர் உளாள நீர்நிலைக்கு ஊரூணி என்றும் பெயர்.


கல்லணையின் நீளம் 1080 அடியாகவும் அகலம் 40 முதல் 60 அடியாகவும் உயரம் 15 முதல் 18 அடியாகவும் இருக்கிறது.


இந்திய நீர்பாசனத்தின் தந்தை சர் ஆர்தர் காட்டன்.

இவர் கல்லணைக்கு ' கிராண்ட் அணைக்கட் ' என்ற பெயரை சூட்டினார். மேலும் கல்லணையின் கட்டுமான உத்தியைக்க கொண்டு 1873ல் கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்பார் பேராசிரியர் தொ.பரமசிவன்


குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்கிறார் ஆண்டாள்.


தெய்வச்சிலைகளை குளிக்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்பர். 


சனி நீராடு என்பது ஔவையின் வாக்கு.


திருமணமான பின் கடலாடுதல் என்ற வழக்கமும் தமிழகத்தில் நிலவுகிறது.


தமிழ்நாடு வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது.


தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்களும் விளக்கமும்

ஆழிக்கிணறு      -   கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
இலஞ்சி                  -   பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்.
கூவல்                     -   உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை 
குண்டு                    -   குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
குண்டம்                -   சிறயதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
சிறை                      -   தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை 

பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மிணவராகவூம் விளங்கியவர் கவிஞர் தமிழ் ஒளி.


சுந்தரர்                                       -    திருத்தொண்டர் தொகை

நம்பியாண்டார் நம்பி       -    திருத்தொண்டர் திருவந்தாதி
சேக்கிழார்                              -    திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்)

நம் முன்னோர்கள் நீரநிலைகளை உருவாக்குபவரை உயிரை உருவாக்குபவர் என்று போற்றினர்.



இயல் 3 உள்ளத்தின் சீர்


சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏறுதழுவுதல் முல்லைநிலத்திற்கு உரிய விளையாட்டு.


கலித்தொகை தவிர ஏறுதழுவுதல் பற்றி சிலப்பதிகாரம் , புறப்பொருள் வெண்பா மாலை, பள்ளு போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது.


சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது.


தேசிய விளையாட்டாக காளைச் சண்டையைக் கொண்டுள்ள நாடு ஸ்பெயின்.


இந்திரவிழா பற்றி சிலப்பதிகாரம் & மணிமேகலையில் விவரிகாகப்பட்டுள்ளது. மணிமேகலையில் முதல் காதையான விழாலறைக் காதையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்திரவிழா நடைபெற்ற ஊர் புகார் நகரம். இந்திர விழா மொத்தம் 28 நாள்கள் நடைபெறும்.

மணிமேகலை பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம், பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க்காப்பியம். இது சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது. முப்பது காதைகளை உடையது. பௌத்த சமயச் சார்புடையது.


மதுரை அருகே கீழடி அகழாய்வுப் பொருள்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன.


ரோமனிய மட்பாண்டங்கள் அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்தன்.


1863 ல் இராபர்ட் புரூஸ்புட், சென்னை பல்லாவரம் பகுதியில் கற்கருவிகளைக் கணாடறிந்தார். இதுவே இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் ஆகும்.


1914 ல் ஆதிச்சநல்லூரில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன்.


டைனோசர் உலாவித் திரிந்த தமிழ் மண் என அரியலூர் , பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன். உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கு தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகவும் தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று காங்கேயம் கருதப்படுகிறது. 

கரூர் அமராவதி ஆற்றுத்துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பட்டிமண்டபம் என்பது தான் இலக்கிய வழக்கு , ஆனால் பலரும் பட்டிமன்றம் என குறிப்பிடுகின்றனர்.


பழையன புகுதலும் பழையன கழிதலும் என்று கூறிய இலக்கணப் புலவர் பவணந்தி முனிவர்


தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் திருக்குறள். இது முதலில் 1812 ல் தஞ்சை ஞானப்பிரகாசம் என்பவரால் அச்சிடப்பட்டுள்ளது.


திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை , மூங்கில்
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.





                       இயல் 4 எட்டுத்திக்கும் சென்றிடுவீர்




1959 ல் ஒளிப்படி இயந்திரம் ( Photo copier or xerox ) உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் செஸ்டர் கார்ல்சன்.

1846 ல் குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றி கண்டு காப்பரிமை பெற்றவர் அலெக்சாண்டர் பெயின்


பான்டெலிகிராப் என்ற தொலைநகல் கருவியை உருவாக்கியவர் ஜியோவான்னி காசில்லி.


1985 ல் கணினி மூலம் தொலை நகல் எடுக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடித்தவர் ஹாங்க் மாக்னஸ்கி.


தானியக்க பண இயந்திரம் (ATM) கண்டறிந்தவர் ஜான் ஷெப்பர்டு பாரன். 1967 june 27 ல் இலண்டனில் நிறுவப்பட்டது.


1962 ல் கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு காப்புரிமை பெற்றவர் ஆட்ரியன் ஆஷ்பீல்டு.


1979 ல் இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் மைக்கேல் ஆல்ட்ரிச்.


1989 ல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது.


1990 ல் டிம் பெர்னெர்ஸ் லீ வையக விரிவு வலை வழங்கியை உருவாக்கினார்.


1991ல் இணையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.


கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் வைரமுத்து.

இவர் இந்தியாவின் தலைசிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறையும் மாநில அரசின் விருதை நான்கு முறையும் பெற்றவர்.

இஸ்ரோவின் 9வது தலைவர் சிவன். 2015 ம் ஆண்டில் விக்ரம் சாராபிய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்து , ISRO வின் தலைவராகப் பெறுப்பேற்றுள்ளார்.

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை மற்றும் ஆரியப்பட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்கு காரணமானவர் விக்ரம் சாராபாய்.

சித்தாரா - SITARA ( Software for Integrated Trajectory Analysis with Real time Application ) என்ற செயலியை உருவாக்கியவர் - தற்போதைய இஸ்ரோ தலைவர் சிவன்.
அனைத்து செயற்கை கோள்களும் சித்தாரா செயலியை பயன்படுத்தி தான் விண்ணில் ஏவப்படுகின்றன.

இந்திய ஏவுகணை நாயகன் அப்துல்கலாம்.

தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் வளர்மதி . இவர் இஸ்ரோவின் செயற்கைகோள் திட்ட இயக்குநராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குனர் அருணன் சுப்பையா. இவர் மங்கல்யான் செவ்வாய் சுற்றுக்கலன் திட்ட இயக்குநராகவும் உள்ளார்.

இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் மயில்சாமி அண்ணாதுரை. சந்திராயன்-1 திட்ட இயக்குநராக பணியாற்றியவர்.
மயில்சாமி அண்ணாதுரை சர்.சி.வி ராமன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவர் தன் அறிவியல் அனுபவங்களை 'கையருகே நிலா ' என்ற நூலாக எழுதி உள்ளார்.

ஏன்? எதற்கு? எப்படி? என்ற நூலை எழுதியவர் சுஜாதா






3 comments: