Wednesday, 27 June 2018

2018 புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு தமிழ் பாடக் குறிப்புகள்



2018 புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு தமிழ் பாடக் குறிப்புகள்




இயல் 1  அமுதென்று பேர்


இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300 க்கும் மேற்ப்பட்டது .

இவற்றை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். அவை ,

1. இந்தோ – ஆசிய மொழிகள்
2. திராவிட மொழிகள்
3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
4. சீன – திபெத்திய மொழிகள்

இந்தியநாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று ச.அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.


திராவிடம் என்ற  சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலப்பட்டர்.


தமிழ் என்ற சொல்லிலிருந்துதான் திராவிடா என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஹீராஸ் பாதிரியார் என்பார்

இம்மாற்றத்தைத் தமிழ் → தமிழா → தமிலா → டிரமிலா → ட்ரமிலா → த்ராவிடா → திராவிடா என்று விளக்குகின்றார்.

அறிஞர் வில்லிய ம் ஜோன்ஸ் என்பார் வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டார்.


முதன்முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,

மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய
மொழிகள் எனவும் பெயரிட்டர்.

ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை

என்றும் கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

திராவிட மொழிக்குடும்பம்,மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள் , நடுத்திராவிட மொழிகள் , வட திராவிட  மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது .


திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்.


தமிழ் வட மொழியின் மகளன்று ; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி;

கால்டுவெல்

"
காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்


காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! "   ஈரோடு தமிழன்பன்


இவரது ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலுககு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.


உ்லகத் தாய்மொழி தினம் பிப்ரவரி 21


தமிழை ஆட்சி மொழியகாக்க கொண்ட நாடுகள் இ்லங்கை, சிங்கப்பூர்.

கண்ணி -  இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர். அதே போல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.


சொல்லும் பொருளும் 


மூன்றினம்   -  துறை , தாழிசை , விருத்தம்

முக்குணம்   -  சத்துவம் , இராசசம் , தாமசம்.
ஊனரசம்      -  குறையுடைய சுவை 

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான தூது , வாயில் இலக்கியம் , சந்து இலக்கியம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.


தமிழ் விடு தூது 268 கண்ணிகளைக் கொண்டது. இந்நூலின் ஆசிரியர் யார் என அறிய இயலவில்லை. இதை 1930 ல் உ.வே.சா முதன்முதலில் பதிப்பித்தார்.


பெயர்                                                எண் அளவு


முந்திரி                                                   1/320

அரைக்காணி                                     1/160
அரைக்காணி முந்திரி                   3/320
காணி                                                     1/80
கால் வீசம்                                           1/64
அரைமா                                                1/40
அரை வீசம்                                          1/32
முக்காணி                                            3/80
முக்கால் வீசம்                                  3/64
ஒருமா                                                   1/20
மாகாணி (வீசம்)                               1/16
இருமா                                                   1/10
அரைக்கால்                                        1/8
மூன்றுமா                                             3/20
மூன்று வீசம்                                       3/16
நாலுமா                                                1/5


பாவின் சுவைகளில் ஒன்றாக இளிவரல் என்ற துன்பச் சுவையினைத்
தமிழிலக்கணங்கள் சுட்டுகின்றன.
கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் இளிகியா (ελεγεία) என அழைக்கப்படுகின்றன.

ஒரு தொடரில் எழுவாயும், செயப்படுபொருளும் பெயர்ச்சொல்லாக இருக்கும். பயனிலை, அந்த தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும்.




இயல் 2 உயிருக்கு வேர்


பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்பர்.


இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு உறை கிணறு என்றும் மக்கள் பருகுநீர் உளாள நீர்நிலைக்கு ஊரூணி என்றும் பெயர்.


கல்லணையின் நீளம் 1080 அடியாகவும் அகலம் 40 முதல் 60 அடியாகவும் உயரம் 15 முதல் 18 அடியாகவும் இருக்கிறது.


இந்திய நீர்பாசனத்தின் தந்தை சர் ஆர்தர் காட்டன்.

இவர் கல்லணைக்கு ' கிராண்ட் அணைக்கட் ' என்ற பெயரை சூட்டினார். மேலும் கல்லணையின் கட்டுமான உத்தியைக்க கொண்டு 1873ல் கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்பார் பேராசிரியர் தொ.பரமசிவன்


குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்கிறார் ஆண்டாள்.


தெய்வச்சிலைகளை குளிக்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்பர். 


சனி நீராடு என்பது ஔவையின் வாக்கு.


திருமணமான பின் கடலாடுதல் என்ற வழக்கமும் தமிழகத்தில் நிலவுகிறது.


தமிழ்நாடு வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது.


தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்களும் விளக்கமும்

ஆழிக்கிணறு      -   கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
இலஞ்சி                  -   பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்.
கூவல்                     -   உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை 
குண்டு                    -   குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
குண்டம்                -   சிறயதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
சிறை                      -   தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை 

பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மிணவராகவூம் விளங்கியவர் கவிஞர் தமிழ் ஒளி.


சுந்தரர்                                       -    திருத்தொண்டர் தொகை

நம்பியாண்டார் நம்பி       -    திருத்தொண்டர் திருவந்தாதி
சேக்கிழார்                              -    திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்)

நம் முன்னோர்கள் நீரநிலைகளை உருவாக்குபவரை உயிரை உருவாக்குபவர் என்று போற்றினர்.



இயல் 3 உள்ளத்தின் சீர்


சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


ஏறுதழுவுதல் முல்லைநிலத்திற்கு உரிய விளையாட்டு.


கலித்தொகை தவிர ஏறுதழுவுதல் பற்றி சிலப்பதிகாரம் , புறப்பொருள் வெண்பா மாலை, பள்ளு போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது.


சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது.


தேசிய விளையாட்டாக காளைச் சண்டையைக் கொண்டுள்ள நாடு ஸ்பெயின்.


இந்திரவிழா பற்றி சிலப்பதிகாரம் & மணிமேகலையில் விவரிகாகப்பட்டுள்ளது. மணிமேகலையில் முதல் காதையான விழாலறைக் காதையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்திரவிழா நடைபெற்ற ஊர் புகார் நகரம். இந்திர விழா மொத்தம் 28 நாள்கள் நடைபெறும்.

மணிமேகலை பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம், பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க்காப்பியம். இது சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது. முப்பது காதைகளை உடையது. பௌத்த சமயச் சார்புடையது.


மதுரை அருகே கீழடி அகழாய்வுப் பொருள்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன.


ரோமனிய மட்பாண்டங்கள் அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்தன்.


1863 ல் இராபர்ட் புரூஸ்புட், சென்னை பல்லாவரம் பகுதியில் கற்கருவிகளைக் கணாடறிந்தார். இதுவே இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் ஆகும்.


1914 ல் ஆதிச்சநல்லூரில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன்.


டைனோசர் உலாவித் திரிந்த தமிழ் மண் என அரியலூர் , பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன். உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கு தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகவும் தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று காங்கேயம் கருதப்படுகிறது. 

கரூர் அமராவதி ஆற்றுத்துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பட்டிமண்டபம் என்பது தான் இலக்கிய வழக்கு , ஆனால் பலரும் பட்டிமன்றம் என குறிப்பிடுகின்றனர்.


பழையன புகுதலும் பழையன கழிதலும் என்று கூறிய இலக்கணப் புலவர் பவணந்தி முனிவர்


தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் திருக்குறள். இது முதலில் 1812 ல் தஞ்சை ஞானப்பிரகாசம் என்பவரால் அச்சிடப்பட்டுள்ளது.


திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை , மூங்கில்
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.





                       இயல் 4 எட்டுத்திக்கும் சென்றிடுவீர்




1959 ல் ஒளிப்படி இயந்திரம் ( Photo copier or xerox ) உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் செஸ்டர் கார்ல்சன்.

1846 ல் குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றி கண்டு காப்பரிமை பெற்றவர் அலெக்சாண்டர் பெயின்


பான்டெலிகிராப் என்ற தொலைநகல் கருவியை உருவாக்கியவர் ஜியோவான்னி காசில்லி.


1985 ல் கணினி மூலம் தொலை நகல் எடுக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடித்தவர் ஹாங்க் மாக்னஸ்கி.


தானியக்க பண இயந்திரம் (ATM) கண்டறிந்தவர் ஜான் ஷெப்பர்டு பாரன். 1967 june 27 ல் இலண்டனில் நிறுவப்பட்டது.


1962 ல் கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு காப்புரிமை பெற்றவர் ஆட்ரியன் ஆஷ்பீல்டு.


1979 ல் இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் மைக்கேல் ஆல்ட்ரிச்.


1989 ல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது.


1990 ல் டிம் பெர்னெர்ஸ் லீ வையக விரிவு வலை வழங்கியை உருவாக்கினார்.


1991ல் இணையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.


கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் வைரமுத்து.

இவர் இந்தியாவின் தலைசிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறையும் மாநில அரசின் விருதை நான்கு முறையும் பெற்றவர்.

இஸ்ரோவின் 9வது தலைவர் சிவன். 2015 ம் ஆண்டில் விக்ரம் சாராபிய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்து , ISRO வின் தலைவராகப் பெறுப்பேற்றுள்ளார்.

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை மற்றும் ஆரியப்பட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்கு காரணமானவர் விக்ரம் சாராபாய்.

சித்தாரா - SITARA ( Software for Integrated Trajectory Analysis with Real time Application ) என்ற செயலியை உருவாக்கியவர் - தற்போதைய இஸ்ரோ தலைவர் சிவன்.
அனைத்து செயற்கை கோள்களும் சித்தாரா செயலியை பயன்படுத்தி தான் விண்ணில் ஏவப்படுகின்றன.

இந்திய ஏவுகணை நாயகன் அப்துல்கலாம்.

தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் வளர்மதி . இவர் இஸ்ரோவின் செயற்கைகோள் திட்ட இயக்குநராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குனர் அருணன் சுப்பையா. இவர் மங்கல்யான் செவ்வாய் சுற்றுக்கலன் திட்ட இயக்குநராகவும் உள்ளார்.

இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் மயில்சாமி அண்ணாதுரை. சந்திராயன்-1 திட்ட இயக்குநராக பணியாற்றியவர்.
மயில்சாமி அண்ணாதுரை சர்.சி.வி ராமன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவர் தன் அறிவியல் அனுபவங்களை 'கையருகே நிலா ' என்ற நூலாக எழுதி உள்ளார்.

ஏன்? எதற்கு? எப்படி? என்ற நூலை எழுதியவர் சுஜாதா






Saturday, 23 June 2018

2018 புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு கணித பாடக் குறிப்புகள்




2018 புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு கணித பாடக் குறிப்புகள்





ஜெர்மன் கணிதவியலாளர் ஜார்ஜ் காண்டர் கணங்களின் கோட்பாடுகளை உருவாக்கினார்.
" பன்மையையும் ஒருமையாகக் காண வைப்பது கணம் "- ஜார்ஜ் கேண்டர்

கணம் (Set) நன்கு வரையறுக்கப்பட்ட பொருள்களின் தொகுப்பு கணம் எனப்படும்.

ஒரு கணத்தில் உள்ள உறுப்புக்கள் ஒரே ஒரு முறை மட்டுமே பட்டியலிடப்பட
வேண்டும்.

ஒரு கணத்தில் உள்ள உறுப்புக்கள் வெவ்வேறு வகையில்  வரிசைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டாலும் கணம் மாறாது.

கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கை ஆதி எண் என அழைக்கப்படுகிறது. அதனை n(A) எனக் குறிப்பிடுவர்.
உறுப்புகள் இல்லாத கணம் வெற்றுக் கணம் என அழைக்கப்ப டுகிறது.

கணத்திலுள்ள உறுப்புகள் பூச்சியமாகவோ அல்லது முடிவுறு எண்ணிக்கையிலோ இருந்தால் அது முடிவுறு கணம் என அழைக்கப்படுகிறது. இல்லையெனில், முடிவுறாக்கணம் என அழைக்கப்ப டுகிறது.

இரு முடிவுறு கணங்களின் ஆதி எண்கள் சமம் எனில், அவை சமான கணங்கள் என அழைக்கப்படுகின்றன.

இரு கணங்களிலுள்ள அனை த்து உறுப்புகளும் ஒரே மாதிரியான உறுப்புகளாக இருந்தா ல் அவ்விரு கணங்களும் சம கணங்களாகும்.

A இல் உள்ள ஒவ்வோர் உறுப்பும் B இல் இருந்தால் A என்ற கணம், B இன் உட்கணமாகும்.

A மற்றும் B கணங்களின் சேர்ப்புக் கணம் A அல்லது B அல்லது இரண்டிலும் உள்ள அனைத்து உறுப்புகளையும் கொண்டு அமையும்.

A மற்றும் B கணங்களில் உள்ள  பொதுவான உறுப்புகளைக் கொண்ட கணம் வெட்டுக்கணம் என அழைக்கப்படுகிறது.

A∩B = Q எனில் A மற்றும் B ஆகிய கணங்கள் வெட்டாக் கணங்கள் என
அழைக்கப்படுகின்ற ன. A∩B ≠Q எனில் A மற்றும் B ஆகிய கணங்கள் வெட்டும் கணங்கள்(Overlapping) என அழைக்கப்படுகின்றன.

" பேரண்டத்தையே உருவாக்குவன எண்கள் "  -பிதாகரஸ்

எண்முறை கணினியானது முதன் முதலில் 1926 ஆம் ஆண்டு அமெரிக்க கணித அறிஞரும், எண்ணியலாளருமான நார்மன் லெக்மர் (Norman Lehmer) என்பவரால் மிதிவண்டி சங்கிலிகள் மற்றும் கம்பிகளைக் கொண்டு

உருவாக்கப்பட்டது.

இயல் எண்களின் கணம்  N = { 1, 2, 3, … } என்பதாகும்.

முழு எண்களின் கணத்தை நாம் W எனக் குறிப்பிடுவோம். 
W = { 0, 1, 2, 3, …}

முழுக்களின் கணத்தை நாம் Z எனக் குறிப்பிடுவோம்.
Z= { …, –3, –2, –1, 0, 1, 2, 3,…}

இரு முழுக்களை விகிதமாக எழுத இயலாத எண்களே விகிதமுறா எண்கள் ஆகும்.

தங்க விகிதம் (Golden Ratio ) என்பது கலை மற்றும் கட்டடக் கலையில் சிறந்த அற்புத விகிதமாகப் போற்றப்படுகிறது. ஐங்கோணம், ஐங்கரம், தசமகோணம் போன்ற எளிய வடிவியல் தூரங்களின் விகிதங்களைக் கணக்கிடத் தடுமாறும்போது இந்த எண் பயன்படும்.

முடிவுறா மற்றும் சுழல் தன்மையற்ற தசம விரிவைப் பெற்றிருக்கும் எண்கள் விகிதமுறா எண்கள் ஆகும்

ஒரு விகிதமுறு எண்ணினை முடிவுறு தசம விரிவாகவோ அல்லது முடிவுறாச் சுழல் தசம விரிவாகவோ குறிப்பிடலாம்.

" இயற்கணிதமே எண்செயலிகளின் அடிப்படை ".  - ஜான் ரே

" நரம்பின் மீட்டலில் வடிவியலைக் காணலாம்; கோளத்தின் இடைவெளியில் இசையை உணரலாம் "   – பிதாகரஸ்

கிரேக்க தத்துவ மேதை தேலீஸ் பிரமிடுகளின் உயரத்தைக் காணவும், கடற்கரைக்கும் கப்பலுக்கும் இடைப்பட்ட தூரத்தையும் கணக்கிடவும்
வடிவியலைப் பயன்படுத்தினார்.

குழிவுப் பலகோணம் (Concave Polygon): பல கோணத்தின் ஏதேனும் ஒரு
கோணத்தின் அளவு 180° யை விட அதிகமாக இருந்தால் அது குழிவுப்
பல கோணமாகும்

குவிவுப் பலகோணம் (Convex Polygon): பல கோணத்தின் அனை த்து
உட்கோணங்களும் 180° யை விடக் குறைவாக இருக்கும் (மூலைவிட்டங்கள் பல கோணங்களுக்கு உள்ளேயே அமையும்).

பல கோணத்தின் பக்கம் (n ≥ 3), எனில் அதன் உள் கோணங்களின் கூடுதல்
(n–2)× 180°

குவிவு பல கோணத்தின் (Convex polygon) பக்கங்களை நீட்டுவதால் உண்டாகும் வெளிக்கோணங்களின் கூடுதல் 360° .

ஓர் இணைகரம் என்பது எதிர்ப்பக்கங்கள் இணையாக மற்றும் சமமாக உள்ள நாற்கரமாகும்.

ஒரு சாய்சதுரம் என்பது எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் மற்றும் எல்லாப் பக்கங்களும் சமமாகவும் உள்ள நாற்கரமாகும்.

ஒரு சரிவகம் என்பது ஒரு சோடி எதிர்ப் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரமாகும்.

ஒவ்வோர் இணைகரமும் சரிவகமாகும். ஆனால் ஒவ்வொரு சரிவகமும்  இணைகரமாக இருக்க வேண்டியதில்லை .

ஒவ்வொரு சாய்சதுரமும் இணைகரமாகும். ஆனால் ஒவ்வோர் இணைகரமும் சாய்சதுரமாக இருக்க வேண் டியதில்லை .

ஒவ்வொரு செவ்வகமும் இணைகரமாகும். ஆனால் ஒவ்வோர் இணைகரமும்
செவ்வகமாக இருக்க வேண்டியதில்லை .

ஒவ்வொரு சதுரமும் சாய்சதுரமாகும். மேலும், ஒவ்வொரு சதுரத்தையும் இணைகரம் என நிறுவலாம்.

ஒரு சாய்சதுரம் என்பது சமபக்க இணைகரமாகும்.
ஒரு செவ்வகம் என்பது சமகோண இணைகரமாகும்.
ஒரு சதுரம் என்பது சமபக்க மற்றும் சமகோண இணைகரமாகும்.

" பிரபஞ்ச இயக்கத்தின் அளவீட்டுக் கலையைத் துல்லியமாக
முன்மொழிந்து விளக்கும் பகுதியே வடிவியல் "  – சர் ஐசக் நியூட்டன்


Friday, 22 June 2018

2018 புதிய பாடத்திட்டத்தின் படி 6 ஆம் வகுப்பு தமிழ் பாடக் குறிப்புகள் இயல் 3



இயல் 3  அறிவியல் தொழில்நுட்பம்


"அறிவியல் ஆத்திசூடி "  என்ற பாடலை இயற்றியவர்  நெல்லை சு.முத்து

சொல்லும் பொருளும்

இயன்றவரை       -     முடிந்தவரை
ஒருமித்து               -      ஒன்றுபட்டு

ஔடதம்                 -      மருந்து

தம்மை ஒத்த  அலை நீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளிமையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

ஓய்வற                     =    ஓய்வு + அற
ஏன் + என்று             =    ஏனென்று
ஔடதம் + ஆம்     =    ஔடதமாம்


எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
சரியான விடை

அணுகு                 x      விலகு
ஐயம்                     x      தெளிவு
ஊக்கம்                 x      சோர்வு
உண்மை              x      பொய்மை



"வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்."  என்ற பாடலை இயற்றியவர் மகாகவி பாரதியார்.

ஆழக்கடல்                            =     ஆழம் + கடல்
விண்வெளி                           =     விண் + வெளி
நீலம் + வான்                        =      நீலவான்
இல்லாது + இயங்கும்      =      இல்லாதியங்கும்


காரல் கபெக் (Karel capek) என்பவர் ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை ’ என்பது பொருள்.

1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெ ற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரிகேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார். ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer)அவருடன் போட்டியிட்டது. போட்டியின் முடிவில் போட்டியில் டீப் புளூவே வெற்றி வாகை சூடியது”.

உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர்
சோபியா’. மேலும் ஐக்கிய நாடுகள் சபை ‘ புதுமைகளின் வெற்றியாளர் ’ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை .

நின்றிருந்த                    =     நின்று + இருந்த 
அவ்வுருவம்                 =     அ + உருவம்
மருத்துவம் + துறை  =     மருத்துவத்துறை
செயல் + இழக்க          =     செயலிழக்க 

அப்துல்கலாம் கூற்று

தமிழில் திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்த நூலாகும்.

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்’- என்னும் குறள் என் வாழ்க்கைக்கு வலுசேர்த்த து. அதுபோல் ‘லிலியன் வாட்சன் ’ எழுதிய, 'விளக்குகள் பல தந்த ஒளி’ (Lights from many lamps) என்னும் நூலை யும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை ப் படித்தபோது அறிவு, தன்னம்பிக்கை , மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றேன் .

அப்துல்கலாம்  அவர்கள் பெரிதும் மகிழ்ந்த நிகழ்வு

பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் ‘கார்பன் இழையை’ கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்ததும் மகிழ்ந்த
நிகழ்ச்சிதான் அப்துல்கலாம் அவர்களுக்கு பெருமகிழ்வை அளித்தது.

525 கிலோ எடையுள்ள ஆளில்லாச் செயற்கைக் கோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ள து.

சர்.சி.வி. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?
" கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது? "

சர்.சி.வி. இராமன் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்.இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம்.

2018 புதிய பாடத்திட்டத்தின் படி 6 ஆம் வகுப்பு தமிழ் பாடக் குறிப்புகள் இயல் 2

இயல் 2 இயற்கை

"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்"  என்ற பாடலை இயற்றியவர் இளங்கோவடிகள்

சொல்லும் பொருளும்

கொங்கு                -    மகரந்தம்
அலர்                       -    மலர்தல்
திகிரி                       -   ஆணைச்சக்கரம்
பொற்கோட்டு    -    பன்மயமான சிகரத்தில்
மேரு                       -    இமயமலை
நாமநீர்                   -   அச்சம் தரும் கடல்
அளி                         -    கருணை

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின்
முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன .

கழுத்தில் சூடுவது    தார்
கதிரவனின் மற்றொரு பெயர் ஞாயிறு
வெண்குடை                 =    வெண்மை + குடை
பொற்கோட்டு               =   பொன் + கோட்டு
கொங்கு + அலர்           =   கொங்கலர்
அவன் + அளிபோல்   =   அவனளிபோல்

"காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும்– அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்" என்ற பாடலை இயற்றியவர்  பாரதியார்

சொல்லும் பொருளும்

காணி              -      நில அளவைக் குறிக்கும் சொல்
மாடங்கள்     -      மாளிகையின் அடுக்குகள்
சித்தம்             -      உள்ளம் .

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர். எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய பல நூல்களை இயற்றி உள்ளார்.


மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்  அடுக்குகள்

நிலத்தினிடையே   =   நிலத்தின் + இடையே
முத்து + சுடர்             =   முத்துச்சுடர்

பொருத்துக.

சரியான விடை 

1. முத்துச்சுடர்போல -     நிலாஒளி

2. தூய நிறத்தில் -     மாடங்கள்
3. சித்தம் மகிழ்ந்திட        -     தென்றல்

பறவைக ள் இடம் பெயர்தலை "வலசை போதல் " என்பர் . நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன .


நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக்  கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன .


கப்பல் பறவை 

சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை
(Frigate bird). இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும்.
இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.

வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

• தலையில் சிறகு வளர்தல்
• இறகுகளின் நிறம் மாறுதல்
• உடலில் கற்றையா முடி வளர்தல்

ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர்

நாராய், நாராய், செங்கால் நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார் . அப்பாடலில் உள்ள தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன .
ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

இந்தியாவின் பறவை மனிதர்  டாக்டர் சலீம் அலி. தன்

வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (T he fall
of sparrow) என்று பெயரிட்டுள்ளார் .

மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது!என்கிறார் பறவையியல் ஆய்வாளர்

சலீம் அலி.

ஆர்டிக் ஆலா  உலகிலேயே நெடுந்தொலைவு (22,000 கி.மீ) பயணம் செய்யும் பறவையினம்.

உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் – 20

கி ழ வ னு ம் க ட லு ம் ( The Oldman and the Sea.) என்னும் ஆங்கிலப்புதினம் 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது. இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே .


2018 புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு கணித பாடக் குறிப்புகள்


2018 புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட 6 ஆம் வகுப்பு கணித பாடக் குறிப்புகள்






ஓர் எண்ணுடன் 1 ஐக் கூட்டினால் கிடைப்பது, அந்த எண்ணின் ‘தொடரி’ ஆகும்.

ஓர் எண்ணிலிருந்து 1 ஐக் கழித்தால் கிடைப்பது, அந்த எண்ணின் ‘முன்னி’ ஆகும்.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 26,345 ச.கிமீ வனப்பகுதி உள்ளது.

பால்வெளித் திரளில் ஏறத்தாழ 20,000 கோடி விண்மீன்கள் உள்ளன


10^100  googol என்று அழைக்கிறோம்.
(இங்கு, பத்தால் 100 முறை பெருக்கப்படுகிறது)
10^googol  என்பது
googolplex என்று அழைக்கிறோம்.

மாநிலம்                 பரப்பளவு (சதுரக் கிமீ)

தமிழ்நாடு                         1,30,058
கேரளா                                  38,863
கர்நாடகா                          1,91,791
ஆந்திரப் பிரதேசம்        1,62,968


“ ” மற்றும் “ ” குறியீடுகளை முதலில் பயன்படுத்தியவர் புகழ்பெற்ற கணிதமேதை தாமஸ் ஹாரியாட் (1560 - 1621)

இந்திய மற்றும் பன்னாட்டு முறையில் காற்புள்ளியின் பயன்பாடு வேறுபடுகிறது.

கொடுக்கப்பட்ட எண்ணின் மதிப்பினை உவந்த துல்லியத்தோடு குறிப்பதை உத்தேச மதிப்பு என்கிறோம்.

முழு எண்களில் மிகச் சிறிய எண் ‘0’ ஆகும்.

0 மற்றும் 1 முறையே முழு எண்களின் கூட்டல் சமனி மற்றும் பெருக்கல் சமனி ஆகும்.

முழு எண்களை எவ்வரிசையிலும் கூட்டவும் அல்லது பெருக்கவும் முடியும். எனவே , இது பரிமாற்றுப் பண்புடையது.

முழு எண்களின் பெருக்கலானது பரிமாற்று மற்றும் சேர்ப்புப் பண்புகளை உடையது.

கூட்டலின் மீதான பெருக்கலின் பங்கீட்டுப் பண்பை முழு எண்கள் நிறைவு செய்யும்.
முழு எண்களைப் பூச்சியத்தால் வகுப்பது வரையறுக்கப்படவில்லை

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுருவை எவ்வாறு படிப்பாய்?
731,687,303,715,884,105,727

இதனை 731 quintillion (குயின்டில்லியன்), 687 quadrillion (குவாட் டிரில்லியன்), 303 trillion (டிரில்லியன்), 715 billion (பில்லியன்), 884 million (மில்லியன்), 
105 thousand (ஆயிரம்), 727. எனப் படிக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் உள்ள  மக்கள் தொகையின் அடர்த்தி ஒரு சதுர கி.மீ இக்கு 555 நபர்கள்

‘Geo’ என்பது புவி மற்றும் ‘metron’ என்பது அளவீடு. இந்த இரு கிரேக்கச் சொற்களிலிருந்து Geometry என்ற சொல் பெறப்பட்டது. வடிவியல் என்பது புவியின் அளவீடு ஆகும். கி.மு. 600 இல்கி ரேக்க நகரம் மிலட்டஸ்-ஐச் சார்ந்த தேல்ஸ் முதலில் வடிவியல் கருத்துகளைப் பயன்படுத்தினார். கிரேக்கக் கணிதவியலறிஞர் பிதாகரஸ் வடிவியலின் முறையான வளர்ச்சிக்கு உதவியவர்.

180° இக்கும் அதிகமான கோண அமைவு பின்வளைக் கோணம்
எனப்படும்.  கொடுக்கப்பட்ட கோணத்தை, 360° கோணத்தில்
இருந்து கழிக்க பின்வளைக் கோணம் கிடைக்கி்றது.

கிரேக்கக் கணிதவியல் அறிஞர் யூக்ளிட்

இவர் தள வடிவியல் சார்ந்த கொள்கைகளை உள்ளடக்கிய 13 தொகுப்புகளை கொண்ட 'ELEMENTS' என்ற நூலை வழங்கியமைக்காக அடையாளம் காணப்பட்டார் . இந்நூல் உலகம் முழுவதும், தலைமுறைதோறும், வடிவியலுக்கான புரிதலில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.



தரவு என்றால் தகவல்கள் மற்றும் எண்ணுருக்களைக் கொண்டு முடிவுகளைப் பெறுதல் ஆகும். தரவு என்பது தகவல்களைச் சேகரிப்பது, அளவிடுவது மற்றும் பகுப்பது, பிறகு அவற்றைப் படமாகவோ அல்லது வரைபடமாகவோ காட்சிபடுத்துவது ஆகும்.

"தரவு" (Data) என்ற சொல் முதன்முதலில் 1640 களில் பயன்படுத்தப்பட்டது. 
1946 இல் "தரவு" என்ற சொல் "பரிமாற்றத்திற்கும், கணினியில் சேமித்து வைப்பதற்கும் உகந்த" என்று பொருள்பட்டது. 1954 இல் தகவல் செயலாக்கம் (Data Processing) என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இலத்தீன் மொழியில் "கொடுத்த" அல்லது "கொடுக்க" எனப் பொருள்படும்.

முற்காலத்தில் படவி்ளக்கப்ப்டங்களே எழுத்து வடிவமாக பயனபடுத்தப்பட்டன. கி.மு.3000 ஆண்டு்களுக்கு முன்பாகவே எகிப்து மெசபடோமியாவில் இம்முறையை பயனபடுத்தினர்.

பிரசாந்த சந்த்ர மஹலானோபிஸ் இவர் வங்காளத்திலுள்ள பிக்ராம்பூரில் பிறந்தார். இவர் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். மேலும் இந்திய அரசாங்கத்திற்குப் புள்ளியியல் விவர ஆய்வில் பெரிதும் உதவி புரிந்தவர்.

சுடோகு என்ற சொல்லானது ஜப்பானிய மொழியிலிருந்து வந்தாகும். இதில் ‘சு’ என்பதற்கு ‘எண்’ என்றும் ‘டோகு’ என்பதற்கு ‘ஒற்றை ’ என்றும் பொருள்.
நவீன சுடோகுவை க் கண்டறிந்தவர் ஹாவர்டு கார்ன்ஸ். இவர் அமெரிக்காவைச்(இண்டியானா) சேர்ந்த 74 வயது கட்டடக் கலைஞர். இந்தச் சுடோகு 1979 இல் வெளியிடப்பட்டது.