Friday, 22 June 2018

2018 புதிய பாடத்திட்டத்தின் படி 6 ஆம் வகுப்பு தமிழ் பாடக் குறிப்புகள் இயல் 3



இயல் 3  அறிவியல் தொழில்நுட்பம்


"அறிவியல் ஆத்திசூடி "  என்ற பாடலை இயற்றியவர்  நெல்லை சு.முத்து

சொல்லும் பொருளும்

இயன்றவரை       -     முடிந்தவரை
ஒருமித்து               -      ஒன்றுபட்டு

ஔடதம்                 -      மருந்து

தம்மை ஒத்த  அலை நீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளிமையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

ஓய்வற                     =    ஓய்வு + அற
ஏன் + என்று             =    ஏனென்று
ஔடதம் + ஆம்     =    ஔடதமாம்


எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
சரியான விடை

அணுகு                 x      விலகு
ஐயம்                     x      தெளிவு
ஊக்கம்                 x      சோர்வு
உண்மை              x      பொய்மை



"வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்."  என்ற பாடலை இயற்றியவர் மகாகவி பாரதியார்.

ஆழக்கடல்                            =     ஆழம் + கடல்
விண்வெளி                           =     விண் + வெளி
நீலம் + வான்                        =      நீலவான்
இல்லாது + இயங்கும்      =      இல்லாதியங்கும்


காரல் கபெக் (Karel capek) என்பவர் ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை ’ என்பது பொருள்.

1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெ ற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரிகேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார். ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer)அவருடன் போட்டியிட்டது. போட்டியின் முடிவில் போட்டியில் டீப் புளூவே வெற்றி வாகை சூடியது”.

உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர்
சோபியா’. மேலும் ஐக்கிய நாடுகள் சபை ‘ புதுமைகளின் வெற்றியாளர் ’ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை .

நின்றிருந்த                    =     நின்று + இருந்த 
அவ்வுருவம்                 =     அ + உருவம்
மருத்துவம் + துறை  =     மருத்துவத்துறை
செயல் + இழக்க          =     செயலிழக்க 

அப்துல்கலாம் கூற்று

தமிழில் திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்த நூலாகும்.

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்’- என்னும் குறள் என் வாழ்க்கைக்கு வலுசேர்த்த து. அதுபோல் ‘லிலியன் வாட்சன் ’ எழுதிய, 'விளக்குகள் பல தந்த ஒளி’ (Lights from many lamps) என்னும் நூலை யும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை ப் படித்தபோது அறிவு, தன்னம்பிக்கை , மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றேன் .

அப்துல்கலாம்  அவர்கள் பெரிதும் மகிழ்ந்த நிகழ்வு

பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் ‘கார்பன் இழையை’ கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்ததும் மகிழ்ந்த
நிகழ்ச்சிதான் அப்துல்கலாம் அவர்களுக்கு பெருமகிழ்வை அளித்தது.

525 கிலோ எடையுள்ள ஆளில்லாச் செயற்கைக் கோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ள து.

சர்.சி.வி. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?
" கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது? "

சர்.சி.வி. இராமன் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்.இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம்.

No comments:

Post a Comment