இயல் 2 இயற்கை
"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்" என்ற பாடலை இயற்றியவர் இளங்கோவடிகள்
சொல்லும் பொருளும்
கொங்கு - மகரந்தம்
அலர் - மலர்தல்
திகிரி - ஆணைச்சக்கரம்
பொற்கோட்டு - பன்மயமான சிகரத்தில்
மேரு - இமயமலை
நாமநீர் - அச்சம் தரும் கடல்
அளி - கருணை
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின்
முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன .
கழுத்தில் சூடுவது தார்
கதிரவனின் மற்றொரு பெயர் ஞாயிறு
வெண்குடை = வெண்மை + குடை
பொற்கோட்டு = பொன் + கோட்டு
கொங்கு + அலர் = கொங்கலர்
அவன் + அளிபோல் = அவனளிபோல்
"காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும்– அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்" என்ற பாடலை இயற்றியவர் பாரதியார்
சொல்லும் பொருளும்
காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
சித்தம் - உள்ளம் .
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர். எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய பல நூல்களை இயற்றி உள்ளார்.
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் அடுக்குகள்
நிலத்தினிடையே = நிலத்தின் + இடையே
முத்து + சுடர் = முத்துச்சுடர்
பொருத்துக.
சரியான விடை
1. முத்துச்சுடர்போல - நிலாஒளி
2. தூய நிறத்தில் - மாடங்கள்
3. சித்தம் மகிழ்ந்திட - தென்றல்
பறவைக ள் இடம் பெயர்தலை "வலசை போதல் " என்பர் . நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன .
நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன .
கப்பல் பறவை
சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை
(Frigate bird). இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும்.
இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.
வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
• தலையில் சிறகு வளர்தல்
• இறகுகளின் நிறம் மாறுதல்
• உடலில் கற்றையாக முடி வளர்தல்
ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர்
“நாராய், நாராய், செங்கால் நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார் . அப்பாடலில் உள்ள “தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன .
ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.
இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி. தன்
வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (T he fall
of sparrow) என்று பெயரிட்டுள்ளார் .
மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது!என்கிறார் பறவையியல் ஆய்வாளர்
சலீம் அலி.
ஆர்டிக் ஆலா உலகிலேயே நெடுந்தொலைவு (22,000 கி.மீ) பயணம் செய்யும் பறவையினம்.
உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் – 20
கி ழ வ னு ம் க ட லு ம் ( The Oldman and the Sea.) என்னும் ஆங்கிலப்புதினம் 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது. இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே .

No comments:
Post a Comment