Thursday, 21 June 2018

2018 புதிய பாடத்திட்டத்தின் படி 6 ஆம் வகுப்பு தமிழ் பாடக் குறிப்புகள்

2018 புதிய பாடத்திட்டத்தின் படி 6 ஆம் வகுப்பு தமிழ் பாடக் குறிப்புகள்




இயல்  1 இன்பத்தமிழ்


பாரதிதாசன் தமிழைப் பலவிதங்களில் போற்றுகிறார். செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டி பாடியுள்ளார்.

"தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! " என்ற பாடலை இயற்றியவர் பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழுக்குரிய வேறு பெயர்கள் நிலவு , மணம்.


"தமிழே உயிரே வணக்கம்

தாய்பிள்ளை உறவம்மா , உனக்கும் எனக்கும்
அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்"  என்ற பாடலை இயற்றியவர் கவிஞர் காசி ஆனந்தன்

சொல்லும் பொருளும்


நிருமித்த      -      உருவாக்கிய

விளைவு       -     விளைச்சல்
சமூகம்          -      மக்கள் குழு

நிலவு + என்று = நிலவென்று

தமிழ் + எங்கள் = தமிழெங்கள்
அமுதென்று = அமுது + என்று

பொருத்துக

சரியான விடை 
அ) விளைவுக்கு       -     நீர்
ஆ) அறிவுக்கு            -     தோள்
இ) இளமைக்கு         -     பால்
ஈ) புலவர்க்கு             -     வேல்

"கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங்

      கோதையரே கும்மி கொட்டுங்கடி "
               என்ற பாடலை பாடியவர் பெருஞ்சித்திரனார்

சொல்லும் பொருளும்


ஆழிப் பெருக்கு    -      கடல் கோள்

ஊழி                           -      நீண்டதொரு காலப்பகுதி
மேதினி                    -      உலகம்
உள்ளப்பூட்டு         -      அறிய விரும்பாமை

ஆசிரியர் குறிப்பு :

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம். இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்கள இயற்றியுள்ளார். தென்மொழிதமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார். தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.  இவர் இயற்றிய கனிச்சாறு என்னும் நூல் எட்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது.

பாட்டு + இருக்கும்  =  பாட்டிருக்கும்

எட்டு + திசை            =  எட்டுத்திசை 

பொய்யகற்றும்       =  பொய் + அகற்றும்


"என்று பிறந்தவள் என்று உணராத

இயல்பினளாம் எங்கள் தாய் " என்று தமிழ்த்தாயின் தொன்மையைப் பாடியவர் பாரதியார்.

தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

வலஞ்சுழி எழுத்துகள் -  அ, எ, ஔ, ண, ஞ
இடஞ்சுழி எழுத்துகள்  -  ட , ய, ழ,



சொல்               முதலில் ஆளப்படும் 
                                        இலக்கியம்                             மேற்கோள்

தமிழ்             தொல்காப்பியம்    தமிழென் கிளவியும் அதனோரற்றே


தமிழ்நாடு    சிலப்பதிகாரம்       இமிழ்கடல்வேலியைத் தமிழ்நாடு 

                                                              ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்
தமிழன்         அப்பர் தேவாரம்                                   -


சீர்மை என்பது ஒழுங்குமுறையைக் குறிக்கும் சொல். தமிழ் மொழியின் பலவகைச் சீர்மைகளுள் அதன் சொற்சிறப்பு குறிப்பிடத்தக்கது.


பாகற்காய் = பாகு + அல் + காய்


தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவின் ஏழு நிலைகளுக்கும் தனித்தனி பெயர்கள் உள்ளன். அவை அரும்பு , மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்.


"மா"– என்னும் ஒரு சொல் மரம், விலங்கு,பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை , வயல், வண்டு போன்ற பல பொருள்களைத் தருகிறது.


இயல்தமிழ்                  எண்ணத்தை  வெளிப்படுத்தும் ;

இசைத்தமிழ்               உள்ளத்தை மகிழ்விக்கும்;
நாடகத்தமிழ்               உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்.

தாவர இலைப் பெயர்கள்


ஆல், அரசு, மா, பலா, வாழை          இலை

அகத்தி, பசலை , முருங்கை            கீரை
அருகு, கோரை                                       புல்
நெல், வரகு                                              தாள்
மல்லி                                                        தழை
சப்பாத்திக் கள்ளி, தாழை                  மடல்
கரும்பு, நாணல்                                     தோகை
பனை , தென்னை                                 ஓலை
கமுகு                                                        கூந்தல்


நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை . தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்னும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார்.



கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.


திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்து

"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி" என ஔவையார் பாடலில் கூறப்பட்டுள்ள து.

வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்  பெற்றுள்ளது.


சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை ,நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை என்னும் நூலில் காணப்படுகிறது.



"கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி…."      - > கார்நாற்பது

"நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு."  - > பதிற்றுப்ப த்து
"கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர்"                       - > நற்றிணை


தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து.

• எழுத்து இலக்கணம்
• சொல் இலக்கணம்
• பொருள் இலக்கணம்
• யாப்பு இலக்கணம்
• அணி இலக்கணம்



இயல் 2 இயற்கை


"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்"  என்ற பாடலை இயற்றியவர் இளங்கோவடிகள்

சொல்லும் பொருளும்

கொங்கு                -    மகரந்தம்
அலர்                       -    மலர்தல்
திகிரி                       -   ஆணைச்சக்கரம்
பொற்கோட்டு    -    பன்மயமான சிகரத்தில்
மேரு                       -    இமயமலை
நாமநீர்                   -   அச்சம் தரும் கடல்
அளி                         -    கருணை

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின்
முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம்,
என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன .

கழுத்தில் சூடுவது    தார்
கதிரவனின் மற்றொரு பெயர் ஞாயிறு
வெண்குடை                 =    வெண்மை + குடை
பொற்கோட்டு               =   பொன் + கோட்டு
கொங்கு + அலர்           =   கொங்கலர்
அவன் + அளிபோல்   =   அவனளிபோல்

"காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும்– அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்" என்ற பாடலை இயற்றியவர்  பாரதியார்

சொல்லும் பொருளும்

காணி              -      நில அளவைக் குறிக்கும் சொல்
மாடங்கள்     -      மாளிகையின் அடுக்குகள்
சித்தம்             -      உள்ளம் .

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர். எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய பல நூல்களை இயற்றி உள்ளார்.


மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்  அடுக்குகள்

நிலத்தினிடையே   =   நிலத்தின் + இடையே
முத்து + சுடர்             =   முத்துச்சுடர்

பொருத்துக.

சரியான விடை 

1. முத்துச்சுடர்போல -     நிலாஒளி

2. தூய நிறத்தில் -     மாடங்கள்
3. சித்தம் மகிழ்ந்திட        -     தென்றல்

பறவைக ள் இடம் பெயர்தலை "வலசை போதல் " என்பர் . நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன .


நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக்  கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை செல்கின்றன .


கப்பல் பறவை 

சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை
(Frigate bird). இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும்.
இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.

வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

• தலையில் சிறகு வளர்தல்
• இறகுகளின் நிறம் மாறுதல்
• உடலில் கற்றையா முடி வளர்தல்

ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர்

நாராய், நாராய், செங்கால் நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார் . அப்பாடலில் உள்ள தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன .
ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.

இந்தியாவின் பறவை மனிதர்  டாக்டர் சலீம் அலி. தன்

வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (T he fall
of sparrow) என்று பெயரிட்டுள்ளார் .

மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது!என்கிறார் பறவையியல் ஆய்வாளர்

சலீம் அலி.

ஆர்டிக் ஆலா  உலகிலேயே நெடுந்தொலைவு (22,000 கி.மீ) பயணம் செய்யும் பறவையினம்.

உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் – 20

கி ழ வ னு ம் க ட லு ம் ( The Oldman and the Sea.) என்னும் ஆங்கிலப்புதினம் 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது. இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே .





இயல் 3  அறிவியல் தொழில்நுட்பம்


"அறிவியல் ஆத்திசூடி "  என்ற பாடலை இயற்றியவர்  நெல்லை சு.முத்து

சொல்லும் பொருளும்

இயன்றவரை       -     முடிந்தவரை
ஒருமித்து               -      ஒன்றுபட்டு

ஔடதம்                 -      மருந்து

தம்மை ஒத்த  அலை நீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளிமையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

ஓய்வற                     =    ஓய்வு + அற
ஏன் + என்று             =    ஏனென்று
ஔடதம் + ஆம்     =    ஔடதமாம்


எதிர்ச்சொற்களைப் பொருத்துக.
சரியான விடை

அணுகு                 x      விலகு
ஐயம்                     x      தெளிவு
ஊக்கம்                 x      சோர்வு
உண்மை              x      பொய்மை



"வானை அளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்."  என்ற பாடலை இயற்றியவர் மகாகவி பாரதியார்.

ஆழக்கடல்                            =     ஆழம் + கடல்
விண்வெளி                           =     விண் + வெளி
நீலம் + வான்                        =      நீலவான்
இல்லாது + இயங்கும்      =      இல்லாதியங்கும்


காரல் கபெக் (Karel capek) என்பவர் ‘செக்’ நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு ’அடிமை ’ என்பது பொருள்.

1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெ ற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரிகேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார். ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer)அவருடன் போட்டியிட்டது. போட்டியின் முடிவில் போட்டியில் டீப் புளூவே வெற்றி வாகை சூடியது”.

உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர்
சோபியா’. மேலும் ஐக்கிய நாடுகள் சபை ‘ புதுமைகளின் வெற்றியாளர் ’ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது. உயிரில்லாத ஒரு பொருளுக்கு ஐ.நா.சபை பட்டம் வழங்குவதும் இதுதான் முதல் முறை .

நின்றிருந்த                    =     நின்று + இருந்த 
அவ்வுருவம்                 =     அ + உருவம்
மருத்துவம் + துறை  =     மருத்துவத்துறை
செயல் + இழக்க          =     செயலிழக்க 

அப்துல்கலாம் கூற்று

தமிழில் திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்த நூலாகும்.

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்’- என்னும் குறள் என் வாழ்க்கைக்கு வலுசேர்த்த து. அதுபோல் ‘லிலியன் வாட்சன் ’ எழுதிய, 'விளக்குகள் பல தந்த ஒளி’ (Lights from many lamps) என்னும் நூலை யும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை ப் படித்தபோது அறிவு, தன்னம்பிக்கை , மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றேன் .

அப்துல்கலாம்  அவர்கள் பெரிதும் மகிழ்ந்த நிகழ்வு

பாதுகாப்புக் கருவிகளில் பயன்படுத்தப்படும் ‘கார்பன் இழையை’ கொண்டு முந்நூறு கிராம் எடையில் செயற்கைக் கால்கள் உருவாக்கப்பட்டன. அதனை அவர்கள் அணிந்ததும் மகிழ்ந்த
நிகழ்ச்சிதான் அப்துல்கலாம் அவர்களுக்கு பெருமகிழ்வை அளித்தது.

525 கிலோ எடையுள்ள ஆளில்லாச் செயற்கைக் கோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ள து.

சர்.சி.வி. இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?
" கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது? "

சர்.சி.வி. இராமன் 1928 பிப்ரவரி 28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்டார்.இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம்.





















No comments:

Post a Comment