2018 புதிய பாடத்திட்டத்தின் படி 9ஆம் வகுப்பு அறிவியல் பாடக் குறிப்புகள்
1. அளவீடுகளும், அளவிடும் கருவிகளும்
முறையானது (பன்னாட்டு அலகுமுறை ) உலக நாடுகளின்
பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டது.
SI அலகு முறை யில் ஏழு அடிப்படை அலகுகள் (fundamental units) உள்ளன. அவை அடிமான அலகுகள் (base units) என்றும் வழங்கப்படுகின்றன.
ஃபோர்ட்நைட் (Fort night) என்பது இரண்டு வாரங்கள் அல்லது 14 நாட்கள்.
ஒரு கண ம் (moment) என்பது 1/40 மணி நேரம் அல்லது 1.5 நிமிடம் ஆகும்.
ஆட்டோமஸ் (Atomus): நம்மால் கற்பனை செய்து பார்க்கக்கூடிய மிகக் குறைந்த கால அளவாகிய கண் இமைக்கும் நேரமாகும்.
இதன் மதிப்பு 1/6.25 வினாடி அல்லது 160 மில்லி வினாடி ஆகும்.
கழுதைத் திறன் என்பது குதிரைத்திறனில் 1/3 மடங்கு ஆகும். இதன் மதிப்பு
ஏறக்குறைய 250 வாட் ஆகும்.
ஒளியானது 1 / 29, 97, 92, 458 விநாடியில் வெற்றிடத்தில் கடக்கும் தூரமே ஒரு மீட்டர் எனப்படும்.
ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓராண்டு காலம் பயணம்
செய்யும் தொலைவு ஆகும். ஒரு ஒளி ஆண்டு = 9.46 X 10^15 மீ
வானியல் அலகு என்பது புவி மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும்
இடையேயான சராசரித் தலைவு ஆகும்.
ஒரு வானியல் அலகு (1AU) = 1.496 X 10^11 மீ
விண்ணியல் ஆரம் என்பது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல்
பொருட்களின் தூரத்தை அளவிடப்பயன்படுகிறது.
ஒரு விண்ணியல் ஆரம் = 3.26 ஒளி ஆண்டு
நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி (alpha centauri)
சூரியனிலிருந்து 1.34 விண்ணியல் ஆரத்தொலைவில் உள்ள து. இரவு
நேரங்களில் நமது வெறும் கண் ணிற்குத்தெரியும் நட்சத்திரங்கள் சூரியனிலிருந்து 500 விண்ணியல் ஆரத்தொலைவிற்குள் உள்ளன.
மனித உடம்பில் உள்ள அனைத்து இரத்தக்குழாய்களின் மொத்த நீளம்
96,000 கிமீ ஆகும்.
பிறக்கும் பொழுது, ஒரு ஒட்டகச்சிவிங்கிக்குட்டியின் உயரம் 1.8 மீ (6 அடி)
பச்சோந்தியின் நாக்கின் நீளம் அதன் உடம்பின் நீளத்தை விட இரு மடங்காகும்.
1 அடி = 30.4 செமீ
1 மீ = 3.2 அடி
1 அங்குலம் (இன்ச்) = 2.54 செமீ
ஒரு மீட்டர் என்பது ஏறக்குறை ய 40 அங்குலத்திற்குச் சமமானது.
1 குவிண்டால் = 100 கி.கி
1 மெட்ரிக் டன் = 1000 கி.கி= 10 குவிண்டா ல்
1 சூரிய நிறை = 2x10^30 கி.கி
அணுநிறை அலகு (1 amu) = C12 அணுவின் நிறையில் 1/12 மடங்கு நிறை ஆகும்.
1 TMC (Thousand Million Cubic Feet) என்பது நூறு கோடி கனஅடி அளவாகும்.
1 TMC = 2.83x10^10 லிட்டர் தோராயமாக 1 TMC = 3000 கோடி லிட்டர் ஆகும்.
ஒரு வினாடி என்பது சராசரி சூரிய நாளின் 1 / 86400 பங்கு என்றும்
வழங்கப்படுகின்றது. காலத்தின் மிகப் பெரிய அலகு மில்லினியம் ஆகும்.
1 மில்லினியம் = 3.16x10^9s
ஒரு மணி = 2.5 நாழிகை
ஒரு நாள் = 60 நாழிகை (பகல் நேரம் 30 நாழிகை , இரவு நேரம் 30 நாழிகை )
வெப்பநிலை அலகு மாற்ற அட்டவணை
ஃபாரன்ஹீட் செல்சியஸ் கெல்வின்
ஃபாரன்ஹீட்(F) F (F-32)x 5/9 (F-32) x (5 / 9) + 273
செல்சியஸ்(C) ( Cx (9/5))+32 C C+273
கெல்வின்(K) (K-273) x( 9 / 5)+32 K - 273 K
கிரிக்கெட் பந்து, கோலிக்குண்டு போன்ற கோளக வடிவ பொருட்கள் மற்றும் தேநீர்க் குடுவை , பேனா மூடி போன்ற உள்ளீடற்ற பொருட்களின் விட்டங்களை அளக்க வெர்னியர் அளவியைப் பயன்படுத்தலாம்.
வெர்னியர் அளவுகோலில் மீச்சிற்றளவு = 0.1 mm = 0.01 cm
திருகு அளவி ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு (0.01மி.மீ) அளவிற்குத்
துல்லியமாக அளவிடும் கருவியாகும். இக்கருவி மெல்லிய கம்பியின்
விட்டம், மெல்லிய உலோகத் தகட்டின் தடிமன் போன்றவற்றை அளவிட பயன்படுகிறது.
திருகு அளவியின் மீச்சிற்றளவு = 0.01 mm = 0.001 cm
ஒரு முட்டையின் ஓடானது அந்த முட்டையின் எடையில் 12% ஆகும்.
ஒரு நீலத்திமிங்கலத்தின் எடை 30 யானைகளின் எடைக்குச் சமம். அதன்
நீளம் மூன்று பேருந்துகளின் நீளத்திற்குச் சமம்.
பொதுத் தராசினைக் கொண்டு துல்லியமாக அளவிடக்கூடிய நிறை 5 கி.கி.
இயற்பியல் தராசு, எண்ணிலக்கத் தராசு போன்றவற்றின் துல்லியத் தன்மை
1 மி.கி.
பொதுத் தராசுத் தராசு, இயற்பியல் தராசு, இரு தட்டுத் தராசு, எண்ணிலக்கத் தராசு போன்றவற்றை நிறையை அளவிடப் பயன்படுத்துகின்றனர்.
சுருள் வில் தராசு பொருளின் எடையைக் கணக்கிடப் பயன்படுகிறது.
ஒரு மனிதனின் நிறை = 5 0 கி.கி எனில்,
எடை (w) = 50 x 9.8 = 490 நியூட்டன்
நிலவில் புவியீர்ப்பு முடுக்கம் 1.63 மீ/வி^2 ஆகும்.
70 கி.கி நிறை யுள்ள மனிதனின் எடை புவியில் 686 நியூட்டனாகவும், நிலவில் 114 நியூட்டனாகவும் உள்ள து. ஆனால் அவரது நிறை 70 கிலோகிராமாகவே உள்ளது.
2.இயக்கம்
தொலைவு திசையைக் கருதாமல் ஒரு பொருள் நடந்து வந்த உண்மையான பாதையின் அளவு. இது ஸ்கேலார் அளவுரு.
இடப்பெயர்ச்சி என்பது குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருளொன்றின் நிலையில் ஏற்படும் மாற்றம். இது வெக்டர் அளவுரு.
தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சியின் SI அலகு மீட்டர்.
எந்த ஒரு கால இடைவெளியிலும் பொருள் கடந்த தொலைவு சுழி ஆகாது. ஆனால் இடப்பெயர்ச்சி சுழி ஆகும்.
வேகம் = கடந்த தொலைவு / காலம்
இது ஸ்கேலார் அளவு.
திசை வேகம் = இடப்பெயர்ச்சி / காலம்
இது வெக்டர் அளவு.
வேகம் மற்றும் திசைவேகத்தின் SI அலகு மீ / வி
வேகம் என்பது எத்திசையிலும் நேர்மதிப்பைப் பெறும்.
திசைவேகம் என்பது நேர் &எதிர் மதிப்பு இரண்டையும் பெறும். சுழி மதிப்பையும் பெறும்.
முடுக்கம் = (v - u ) / t
v = இறுதி திசைவேகம்
u = தொடக்க திசைவேகம்
v > u = முடுக்கம் +ve
v < u = முடுக்கம் - ve
எதிர் முடுக்கத்தை வேக இறக்கம் or ஒடுக்கம் எனலாம்.
சீராக முடுக்கப்பட்ட இயக்கம் எல்லாவற்றிற்கும் திசைவேக கால வரைபடம் ஒரு நேர்கோடாக அமையும்.
சீரற்ற முடுக்கப்பட்ட இயக்கத்திற்கு வரைபடம் எந்த ஒரு வடிவத்தையும் கொண்டிருக்கும்.
திசைவேகம் - காலம் வரைகோட்டில் கிடைக்கும் பரப்பளவு இடப்பெயர்ச்சியின் எண் மதிப்பிற்குச் சமம்.
திசைவேகம் - காலம் வரைபடத்தின் சாய்வு கொடுப்பது முடுக்கம்.
தடையின்றி தானே விழும் பொருள்கள் முடுக்கமடையும் , இந்த முடுக்கம் பொருளின் நிறையைப் பொருத்தது அல்ல.
தடையின்றி தானே விழும் பொருள்களுக்கு அதன் ஆரம்ப திசைவேகம் சுழி.
எண்ணிலடங்கா பக்கங்களைக் கொண்ட கோணம் வட்டமாக மாறும்.
வட்டப்பாதையில் சுற்றும் பொருளின் வேகம் V = 2πr / T
வட்டத்தின் மையத்தை நோக்கி செயல்படும் விசை மையநோக்கு விசை எனப்படும்.
மைய நோக்கு முடுக்கம் a = v ^2 /r
F = m . a
F = m v ^2 / r
வட்ட மையத்தில் இருந்து பொருளின் மீது வெளிப்புறமாக செயல்படும் விசை மைய விலக்கு விசை எனப்படும்.
மையவிலக்கு விசை = - மைய நோக்கு விசை.
மையவிலக்கு விசை பயன்பாடுகள் :
1. துணி துவைக்கும் இயந்திரத்தின் துணி உலர்த்தி
2. பாலாடை பிரிக்கும் கருவி.
3 . ஒளி
Thank u, super
ReplyDeletesuper
ReplyDelete